தொப்புள் கொடி அறுத்து ,
தொலை நாட்கள் இல்லை
தொந்தரவு தாங்காமல்
தொலை தூரம் சென்றாயோ!!
தொந்தரவு தான் என்றாலும்
சிந்தித்து இருக்கலாம்
சிறு பிஞ்சுகளை எண்ணி!
இன்று அவள் இல்லை.
எதுவுமே இல்லை !!
எல்லாமே கனவாகி போன
பிஞ்சுகள் வாழ்க்கையில்
கனவில் கூட துணைக்கு
அவள் இல்லை !
அரவணைக்க
அன்பு காட்ட
அறிவுறுத்த
ஆறுதல் சொல்ல
அனுபவம் சொல்லும்.?!
அம்மா இல்லை .,
யாருமே இல்லை !!
அம்மா உன் மேல்
கோபம் எனக்கு
கொலை செய்திருக்கலாம்
என்னை !!
இப்படி விட்டு சென்றதற்கு!!
என்றும் உன் நினைவில்
உன் மகன்!
நன்றி - சிவம்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
0 Comments