நான் உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேன்
என் மனதை கூட உன்னிடம் தந்துவிட்டேன்;
எது வேண்டுமானாலும் நடக்கட்டும் பார்க்கிறேன்;
உலகத்திடம் நான் பயப்படமாட்டேன்;
நான் உன்னிடம் காதல் செய்தே தீருவேன்;
காதல் வந்துவிட்டால் தூக்கமே வராது, அமைதி இருக்காது;
ஒரு முறை காதலை சொல்லிவிட்டால் மறக்கவும் மனம் வராது,
பிரியவும் மனம் வராது;
நீ என்னை அடித்தால், திட்டினால் கூட தாங்கி கொள்வேன்;
ஆனால் உன்னை அவ்வளவு எளிதாக மறக்கமாட்டேன்;
நீ என்னை வெறுத்துவிட்டால், தேம்பி தேம்பி அழுவேன்;
நீ என்னை மறந்துவிட்டால், உயிரை விட்டுவிடுவேன்;
நான் உன்னை இன்னொரு அம்மாவாக நினைக்கிறேன்;
உன் அன்பு, பாசம், உறவுக்காக ஏங்குகிறேன்;
நான் உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேன்
என் மனதை கூட உன்னிடம் தந்துவிட்டேன்;
நன்றி - M.மனோஜ் குமார்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் 2023 கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
0 Comments