சிணுங்கும் சித்திரச் செவ்வானம்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை
தோன்றியிருக்கும் கருமேகக் கூட்டம்
வளர்ந்து வளர்ந்து தேய்ந்து கொண்டிருக்கும் வான் நிலவு
கட்டிக் குறும்பாய் கண்சிமிட்டிக் கொண்டு
விருட்சமாய் வந்து நிற்கும் விண்மீன் கூட்டம்
மழலையென துள்ளும் மரங்கள்
மங்கையர் சுடுவதற்கென்றே
மணம் கமழ்ந்து காத்திருக்கும் மலர்கள்
ஒருமுறை சுவாசம் தந்த பின்னும்
மறுமுறை சுவாசம் தரக் காத்திருக்கும் காற்று
தூரத்து சொந்தம் போல் எட்டி நின்று எப்போதாவது
பார்த்து விட்டு செல்லும் வானவில்
எப்போதும் நமக்கு தேவைப்படும் நன்னீரை
தன் கண்ணீரால் தந்து கொண்டு இருக்கும் மழை
நம் மீது காதல் கொண்டு சுற்றிலும் நம்மை
காண காத்திருக்கும் மலைகள்
விழித்துக் கொள் எனக் கூறும் பகல்
விழி மூடு எனக் கூறும் இரவு
இவை தான் இயற்கையின் குணம்
இவற்றை வதம் செய்து வாழும் மானுடத்தின்
மணம் மட்டுமல்ல குணமும் எங்கே புதைந்து போனது.?
நன்றி - ஹேமா தனசேகர்.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments