திருமண உறவு - Marital Relationship - Essay or Article Competition - 2023 - Sltamil

திருமண உறவு - Marital Relationship

முன்னுரை:- எந்த திருமணமாக இருந்தாலும் சரி, அது காதல் திருமணமோ, கலப்பு திருமணமோ அல்லது வேறு திருமணமோ, திருமணத்தை ஜாக்கிரதையாக பார்த்து செய்ய வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கை சீரழிந்து விடும். ஒரு மனைவிக்கு நல்ல கணவன் அமைய வேண்டும். மற்றும் ஒரு கணவனுக்கு நல்ல மனைவி அமைய வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கை சொர்கம். இல்லையென்றால், வாழ்க்கையே நரகம். ஒரு மனைவிக்கு மோசமான கணவன் அமைவது மற்றும் ஒரு கணவனுக்கு மோசமான மனைவி அமைவது மோசமான நரகவேதனை. அதற்கு பதில், திருமணம் செய்யாமல் தனியாளாக, பிரம்மச்சாரியாக வாழ்ந்து விடலாம் மனைவி பற்றி:- மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இல்லை. அவள் அமைவது அவளை அவளின் பெற்றோர்கள் வளர்த்த விதம். “தாய்க்கு பின் தாரம்” என்று சொல்வார்கள். எல்லாம் மனைவிகளும் அம்மா ஆக முடியாது, அம்மாவிற்கு சமம் இல்லை. ஒரு நல்ல மனைவி தான் இன்னொரு அம்மா, அம்மாவிற்கு சமம். கணவர்களை குழந்தைகள் போல் பார்த்து கொள்வது, கவனிப்பது தான் ஒரு மனைவியின் முக்கிய கடமை ஆகும். “சேல் அகட்டிய மாதரை நம்பாதே” என்று சொல்வார்கள். ஒரு நல்ல மனைவி தன் கணவர் மேல் எப்பொழுதும் ஒரு பார்வை வைத்து கொண்டே இருக்க வேண்டும் கணவன் பற்றி:- “கணவனே கண்கண்ட தெய்வம்” என்று சொல்வார்கள். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்றும் சொல்வார்கள். “குழந்தையும், தெய்வமும் ஒன்று” என்றும் சொல்வார்கள். ஒரு பெண்ணுக்கு அம்மா, அப்பா, பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்க்கு பிறகு, கணவன் தான் கடவுள். ஒரு நல்ல கணவன் என்பவன், தன் மனைவியை பெற்ற அம்மா போல் நடத்த வேண்டும். அவள் ஆசைகள், விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். அம்மா, அப்பா மற்றும் மனைவி மூவரையும் சமமாக நடத்த வேண்டும். ஒரு கணவன் என்பவன் அவன் மனைவிக்கு வயிற்றில் பிறக்காத முதல் குழந்தை. ஒரு நல்ல கணவன் தன் மனைவி மேல் எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் நல்ல இல்லறம்:- பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு மாமனார் மற்றும் மாமியார் தான் அம்மா மற்றும் அப்பா ஆவார்கள். அவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு, புகுந்த வீடு தான் பிறந்து வீடு, அனைத்துமே. புகுந்த வீட்டுக்குள் பிறந்த வீட்டை பற்றி நினைக்க கூடாது, பிறந்த வீட்டின் பெருமைகளை புகழ்ந்து தள்ளக்கூடாது. மேலும் பிறந்த வீட்டின் விஷயத்தை புகுந்த வீட்டுக்குள் வந்து சொல்லக்கூடாது. மற்றும் புகுந்த வீட்டின் விஷயத்தை பிறந்த வீட்டுக்கு வந்து சொல்லக்கூடாது. அப்படி செய்தால், நல்ல இல்லறம் அமையாது. தேவையில்லாமல், வீட்டில் சண்டை, சலசலப்பு வரும். மோசமான பிரச்சனைகளை கொண்டு வரும். பெண்கள் தங்களுடைய கஷ்டங்கள், பிரச்சனைகள், துன்பங்கள் ஏதாவது இருந்தால் மாமனார் மற்றும் மாமியாரிடம் பகிரலாம், சொல்லலாம். தங்கள் தாய் மற்றும் தந்தையிடம் அனைத்தும் பகிர்வது போல, சொல்வது போல, பெண்கள் மாமனார் மற்றும் மாமியாரிடம் அனைத்தும் பகிரலாம், சொல்லலாம். அதை விட்டுவிட்டு, பெண்கள் சம்மந்தமில்லாத நான்கு பேரிடம், உறவினர்களிடம், மற்றவர்களிடம், பிறந்த வீட்டுக்குள் எடுத்துக்கொண்டு போய் சொல்லக்கூடாது. அப்படி செய்தால், வீட்டில் தேவையில்லாத சண்டை, சலசலப்பு மற்றும் பிரச்சனைகள் வரும் உடலுறவு:- திருமணம் ஆகிவிட்டால், கணவன் மற்றும் மனைவி கண்டிப்பாக உடலுறவு பேண வேண்டும். உடலுறவு என்பது ஆண்மை, பாசம் மற்றும் அன்பின் அடையாளம், வெளிப்பாடு. உடலுறவு எவ்வளவு முயற்சி செய்தும் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை, பரவாயில்லை. ஆனால், அதற்காக உடலுறவு செய்யாமல், அதற்கான முயற்சி எடுக்காமல் இருக்கக்கூடாது. இது மிகவும் தவறு. உடலுறவு எவ்வளவோ முயற்சித்தும், குழந்தை பிறக்கவில்லை என்றால், கணவன் மற்றும் மனைவி இருவருக்கும், உடலில் ஏதோ ஒரு குறைபாடு அல்லது கோளாறு உள்ளது என்று அர்த்தம். கணவனும், மனைவியும் சேர்ந்து தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறார்களா? இல்லையா? என்று முடிவு எடுக்க வேண்டும். பிறகு குழந்தை பெற்று கொள்ளப்போகிறார்கள் என்றால் மருத்துவரை அணுகி உடலுறவுக்கான சிகிச்சை மேற்கொண்டு, சரிசெய்துகொண்டு, ஆரோக்கியமாக ஒரு குழந்தையை பெற்றெடுத்து கொள்ளலாம் சில அறிகுறிகள்:- உடலுறவை கூட விடுங்கள். ஒரு பெண் தன் கணவரை சாதாரணமாக தொடவிட வேண்டும். கணவன் மற்றும் மனைவி, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, மார்பில், தோளில் சாய்த்து கொண்டு, கொஞ்சி தாலாட்டுவது etc... இதுபோல் சாதாரணமாக தொடவிட வேண்டும். இது கூட அன்பு, பாசம் மற்றும் ஆண்மையின் வெளிப்பாடு மற்றும் அடையாளம் தான். ஒரு பெண் தன் கணவரிடம் உடலுறவு மேற்கொள்ளவில்லை. மற்றும் சாதாரணமாக தொடவிடவில்லை என்றால் அவள் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாள் என்று அர்த்தம். இது ஆண்களுக்கும் பொருந்தும். ஒரு பெண் தன் கணவரிடம் உடலுறவும் இல்லை, சாதாரணமாக தொடவிடவில்லை என்றால் இந்த மூன்று நோக்கத்தில், ஏதாவது ஒரு நோக்கத்திற்காக வந்திருக்கிறாள் என்று அர்த்தம். ஒன்று, அவள் வேறு ஒரு ஆணிடம் காதல் அல்லது கள்ளக்காதல் செய்கின்றாள் என்று அர்த்தம். இரண்டாவது, அவளுக்கு ஏதாவது உடலில் மோசமான நோய் அல்லது குறைபாடு இருக்கலாம். மூன்றாவது, பணம், வீடு மற்றும் சொத்து அபகரிப்பது போன்று மோசமான சதி வேலைக்காக வந்திருக்கலாம். பிறந்த வீட்டுக்கு பெண்கள் ஏதாவது முக்கியமான பண்டிகை நாட்கள், ஏதாவது ஒரு விசேஷமான நாள் என்றால் செல்லலாம். மற்றபடி, பிறந்த வீட்டுக்கு அடிக்கடி செல்லக்கூடாது. அப்படி அடிக்கடி செல்வதாக இருந்தால், திருமண உறவு நன்றாக அமையாது. தேவையில்லாமல் பிரச்சனைகள், சண்டை மற்றும் சலசலப்பு வரும் பரஸ்பரம் மற்றும் புரிந்துகொள்ளுதல்:- ஒரு கணவனுக்கு கஷ்டம், துன்பம் மற்றும் பிரச்சனைகள் இருந்தால், மனைவியிடம் கூட பகிரலாம், சொல்லலாம். ஒரு கணவனின் கஷ்டம், துன்பம் மற்றும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதே ஒரு மனைவியின் முக்கிய கடமை ஆகும். ஒரு கணவனுக்கு சரியாக தூக்கம் வரவில்லையா? மார்பில், தோளில் குழந்தையை போல சாய்த்து கொண்டு, கணவனை மனைவி கொஞ்சி தாலாட்ட வேண்டும். இன்பமோ! துன்பமோ! நல்லதோ! கெட்டதோ! சந்தோஷமோ! துக்கமோ! வறுமையோ! வளமையோ! எழுச்சியோ! வீழ்ச்சியோ! வெற்றியோ! தோல்வியோ! எதுவாக இருந்தாலும், கணவனுக்கு மனைவி துணையாக, பக்கபலமாக நிற்க வேண்டும். ஏதாவது சண்டை, சலசலப்பு இருந்தால், தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தால், தன் அம்மா மற்றும் அப்பாவிடம் சொல்லலாம். அம்மா மற்றும் மனைவி சண்டை போட்டுக்கொண்டால், கணவன் மற்றும் அப்பா அதை சமாதானம் செய்து தீர்த்து வைக்க வேண்டும். கணவன் மற்றும் மனைவி இடையே சரியான பரஸ்பரம் மற்றும் புரிந்துகொள்ளுதல் இல்லாததால் மற்றும் உடலுறவு மற்றும் தொடவிடுவது இல்லாததால், நாட்டில் திருமண குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒரு கணவன் கூட மனைவிக்கு துணையாக, பக்கபலமாக நிற்கவேண்டும். அவளுக்கு உதவி செய்யவேண்டும். அவள் கஷ்டங்களை தீர்த்துவைக்க வேண்டும் பாலியல் கல்வி:- திருமண குற்றங்கள், காதல் மற்றும் திருமணம் சம்மந்தமான மற்ற குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், ஆசிரியர்கள், பாலியல் கல்வி பற்றி கட்டாயம் பாடம் எடுக்க வேண்டும். பாலியல் கல்வி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டாய பாடம் ஆக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பாலியல் கல்வியை கட்டாய பாடம் ஆக்க வேண்டும். இதற்கான, முயற்சி மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வரும், காதல் மற்றும் திருமண குற்றங்கள் குறையும், கணவன் மற்றும் மனைவி இடையே திருமண உறவு நன்றாக இருக்கும். திருமண உறவு, பாலியல் உறவு மற்றும் காதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் நிறைவு:- ஒரு மனைவிக்கு நல்ல கணவராக இருப்பவன் தான், நாளை ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவாக இருப்பான். ஒரு கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பவள் தான், நாளை ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல அம்மாவாக இருப்பாள். இல்லையென்றால், அம்மா மற்றும் அப்பா சரியில்லை என்றால், அந்த குழந்தை தவறாக வளரும், தவறான வழியில் சென்றுவிடும். ஒரு மாது கணவனை மனைவியும் மற்றும் ஒரு மாது மனைவியை கணவன் ஒதுக்குதல் தவறு. நெடுங்காலம் நிழல் தர இவர்களுக்கு ஏது சுவரு? எவ்வளவு நாள் தான் அம்மாவும், அப்பாவும் பிள்ளைகளை பார்த்துக்கொள்வார்கள், கவனிப்பார்கள்? அவர்களுக்கும் வயதாகிவிடும்! அதனால் தான் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆகையால், கணவனும் மனைவியும் நன்றாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஒரு நல்ல வேலை கிடைப்பது எவ்வளவு கடினமோ! அதேபோல், ஒரு நல்ல திருமண வரன் அமைவதும் மிக கடினம்           

நன்றி - M.Manoj Kumar

வணக்கம் நண்பர்களே!

நமது கட்டுரை தளத்தில் இந்த வருடம் கட்டுரை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கட்டுரையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.

கட்டுரை கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments