தமிழ் கவிதை இயற்கை - Poem Nature - Tamil Kavithai Competition - 2023 - Sltamil

தமிழ் கவிதை இயற்கை - Poem Nature

நீலவான மேகமெங்கும் 

இசை கானம் பாடி வீசும் தென்றலின் சாரலும்

நித்தமும் புல்லை முத்தமிடும் காலைபபொழுதின் 

குளிர் பனித்துளிகளும் 


மாசற்ற அன்பில் மலர்களை

கொஞ்சி உரசிடும் தேனீக்களும்

தெருவெங்கும் பூக்களை தூவி

வரவேற்றிடும் சாலையோர

வானுயர்ந்த மரங்களும்


காதோரம் தன்குரலில் இசை

மீட்டி மகிழும்  கருங்குயிலும்

கருவிழி பார்வையில் தென்படும் 

தோகை மயிலின் நடனமும்


பறந்து திரியும் பசுங்கிளியும்

பாய்ந்தோடும் கன்றுகளும்

சலசலவென நிற்காமல் ஓடி

சுற்றி வரும் நதிகளும்


மெதுவாய் செம்மண்ணை

நனைத்து செல்லும் மழையும்

சட்டென ஒளிரும் மின்னலும்

திடுக்கென ஒலிக்கும்               

இடி முழக்கமும்


மழையில்  நனைந்த 

மண் வாசனையும் இலை

மீது தங்கிடும் நீர்துளிகளும்

மழை துளிகளை  தட்டி     

எண்ணிடும் கரங்களும்

இயற்கையின் மொழியை பேசிடுமே...

நன்றி - Ravikumar Saromi

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments