பாலியல் வன்முறை Sexual violence - Essay or Article Competition - 2023 - Sltamil

Sexual violence

முன்னுரை:- ஒரு ஆணுக்கு பெண் அடிமை இல்லை. அதுபோல, ஒரு பெண்ணுக்கு ஆண்  அடிமை இல்லை. இருவரும் சமம்  தான். ஒரு கணவனுக்கு மனைவி அடிமை இல்லை. அதுபோல, ஒரு மனைவிக்கு கணவன் அடிமை இல்லை.இருவரும் சமம்  தான். திருமணத்திற்கு முன்பு, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தவறு செய்தால், அது அவர்களுடைய பெற்றோர்களை சாறும். திருமணத்திற்கு பிறகு, மனைவி தவறு செய்தால், அது அவளுடைய கணவனை சாறும். கணவன் தவறு செய்தால், அது அவனுடைய மனைவியை சாறும்                                                                 

திருமண உறவில் விரிசல்:-  எந்த நீதிமன்றம் வேண்டுமானாலும் செல்லுங்கள். அது உயர்நீதிமன்றமோ! மாவட்ட நீதிமன்றமோ! அல்லது குற்றவியல் நடுவர் நீதிமன்றமோ! ஒரு நாளைக்கு, 100 விவாகரத்து வழக்குகள் வருகின்றன. இதற்கு காரணம், கணவன்-மனைவி இடையே, சரியான பரஸ்பரம் மற்றும் புரிந்துகொள்ளுதல் இல்லை. மற்றும் பிடிக்காமல் திருமணம் செய்து கொள்வது.

அது ஆணோ! அல்லது பெண்ணோ! பெற்றோர்கள் கட்டாயத்தின் பெயரில், திருமணம் வேறு வழி இல்லாமல் செய்வார்கள். திருமணத்திற்கு முன்பு, வீட்டிற்கு, பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்க வரும்பொழுது, “பிடிக்கவில்லை!” என்று வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். பிடிக்காது, ஆனால் “பிடித்திருக்கிறது!” என்று கஷ்டப்பட்டு சொல்லி, விருப்பமில்லாமல், திருமணம் செய்வார்கள். பிறகு, பின்னால் தேவையில்லாத, மோசமான பிரச்சனைகள் கொண்டு வரும். சண்டை வரும். அது ஆணோ! அல்லது பெண்ணோ! வேறு ஒருவரிடம் காதல் அல்லது கள்ளக்காதல் இருந்தால் கூட, பாதி திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றின                                                         

ஒரு நல்ல பெண்மணி பற்றி:-  “ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!”. “பெண்மணி ஒரு கண்மணி!” என்று சொல்வார்கள். ஒரு பெண் நன்றாக, சரியாக இருந்தால் தான், அந்த குடும்பம் நன்றாக இருக்கும். இல்லையென்றால், அந்த குடும்பமே சீரழிந்து விடும்! சின்னாபின்னம் ஆகி விடும்! எல்லாம் பெண்களின் கையில் உள்ளது. 

13-ஆம் நூற்றாண்டில், தெலுங்கு கவிஞர் பத்தேனா மற்றும் சம்ஸ்கிருத கவிஞர் பர்த்ருஹரி, அவர்களின் சம்ஸ்கிருத மொழி படைப்பான நீதி சாஸ்திரத்தில்,

 “கார்யேஷு தாசி!  கரணேஷு மந்திரி! போஜேஷு மாதா! சயனேஷு ரம்பா! ரூபேஷு லட்சுமி! க்ஷமயெஷு தரித்ரி! ஷத் தர்மயுக்தா!  குல தர்ம பத்தினி!” என்று குறிப்பிட்டுள்ளனர் 

 “கார்யேஷு தாசி!” என்றால், ஒரு பணிப்பெண் போல், வீட்டின் அன்றாட வேலைகளை தினமும் செய்ய வேண்டும்.

 “கரணேஷு மந்திரி!” என்றால், ஒரு ராஜாவுக்கு மந்திரியைப் போல், ஒரு கணவனுக்கு மனைவி ஆலோசனைகள் வழங்க வேண்டும். நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

 “போஜேஷு மாதா!” என்றால், ஒரு தாயைப் போல், உணவு போட வேண்டும். உணவு ஊட்ட வேண்டும்

 “சயனேஷு ரம்பா!” என்றால், சொர்க்கத்தில் இருக்கும் ரம்பையைப் போல், படுக்கையில் சுகம் தர வேண்டும், இன்பம் தர வேண்டும் 

 “ரூபேஷு லட்சுமி!” என்றால், மகாலட்சுமி தாயாரைப் போல், பேரழகு இருக்க வேண்டும் 

 “க்ஷமயெஷு தரித்ரி!” என்றால் பூமா தேவி எனப்படும் பூமி தாயைப் போல் பொறுமை, சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்

 “ஷத் தர்மயுக்தா! குல தர்ம பத்தினி!” என்றால், இந்த ஆறு நற்குணங்களை கொண்டவள், தான் நல்ல மனைவி! நல்ல பெண்மணி! ஆவாள்

 இப்பொழுதெல்லாம், இந்த ஆறு நற்குணங்கள் கொண்ட பெண்ணை காண்பது மிக அறிது                                                           


சமூக ஊடகங்கள் செய்திகள் பற்றி:-  செய்திதாள்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில், செய்தி வரும்! “கணவனை கொன்று விட்டு, மனைவி கள்ளகாதலனோடு தப்பியோட்டம்!”. “மனைவியை கொன்று விட்டு, கணவன் கள்ளகாதலியோடு தப்பியோட்டம்!”. மணமேடை ஏறும் நேரத்தில்! தாலி கட்ட வேண்டிய கடைசி நேரத்தில்! மணப்பெண் காதலனோடு தப்பியோட்டம். மணமகன் காதலியோடு தப்பியோட்டம். மயக்க நாடகமாடி, மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்                                   

காதல் வன்முறை:-  இரு மனங்களும் இணைய வேண்டும். ஒருவரை ஒருவர் பிடிக்க வேண்டும். ஆணுக்கு, பெண்ணை பிடிக்க வேண்டும், பெண்ணுக்கு, ஆணை பிடிக்க வேண்டும். அப்பொழுது தான், அது உண்மையான காதல். இல்லையென்றால், அது காதலே இல்லை! நன்றாக காதலித்துவிட்டு! அனுபவித்துவிட்டு! ஒரு பெண்ணை, ஒரு ஆண் ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்வது. மற்றும் ஒரு ஆணை, ஒரு பெண் ஏமாற்றிவிட்டு, வேறு ஆணை திருமணம் செய்வது. இயல்பாக, சாதாரணமாக நடக்கிறது! இதனால், ஏமாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட ஒரு சில ஆண்கள், பெண்ணின் முகத்தில் அமிலம் ஊற்றுவது. ஏன்! கொலை செய்யும் அளவுக்கு மோசமாக செல்கின்றனர். இதற்கு உதாரணம் – 6.5 வருடங்கள் முன்பு, சென்னை நுங்கம்பக்கம் ரயில் நிலையத்தில், நடந்த “ஸ்வாதி கொலை வழக்கு”. காதலர் ராம்குமார், காதலி ஸ்வாதியை வெட்டி படுகொலை செய்தார். இது மட்டுமல்ல, 6.5 வருடங்களில், பல காதல் படுகொலைகள் இதுப்போல் நடந்துள்ளன                                                               

திருமணம் சம்மந்தமான வன்முறை:-  ஒரு மனைவி சரியாக இருந்தால், சரியான அன்பு, பாசம் கணவரிடம் காட்டினால், கணவர்கள் ஏன் தவறு செய்யப்போகிறார்கள்? ஏன் வேறு பெண்ணை தேடி செல்ல போகிறார்கள்?          ஒரு கணவன் சரியாக இருந்தால், மனைவிகள் ஏன் தவறு செய்யப்போகிறார்கள்? ஏன் வேறு ஆணை தேடி செல்ல போகிறார்கள்?  கள்ளகாதலுக்காக! கணவன் மனைவியை கொலை செய்வது. மற்றும் மனைவி கணவனை கொலை செய்வது. இயல்பாக, சாதாரணமாக நடக்கிறது. பாதி பெண்கள், கள்ளகாதலுக்காக! கணவர் மற்றும் மாமியார் மட்டுமில்லை! பெற்ற குழந்தைகளையே கொலை செய்து விடுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு, திடீரென்று சில பெண்கள், கணவரை தனியாக தவிக்க விட்டு, முன்னாள் காதலனோடு ஓடிப்போகிறார்கள். இப்பொழுதெல்லாம், “Living Together” வாழ்க்கை சாதாரணமாக நடக்கிறது. காலம் கெட்டுவிட்டது. “Living Together”, என்றால் முறையாக தாலி கட்டி, திருமணம் செய்யாமல், கணவன்-மனைவியாக வாழ்வது. ஆரம்பத்தில், நன்றாக இருந்தாலும், இறுதியில் வன்முறையில் முடியும்.  இதற்கு உதாரணம் – 8 மாதங்கள் முன்பு, நடந்த “புது டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கு”. காதலன் அப்தாப், காதலி ஸ்ராத்தவை 32 துண்டுகளாக வெட்டி, படுகொலை செய்தான்                                                          

இது சமூக பிரச்சனையா? தனி நபர் பிரச்சனையா?:-  சமூக ஊடகங்கள் தலையீட்டு இருக்கும் வரை, இது சமூக பிரச்சனை இல்லை. இது ஒரு சாதாரண தனி நபர் பிரச்சனை. ஆனால், சமூக ஊடகங்கள் தலையிட்டால், இது ஒரு பெரிய சமூக பிரச்சனை. பொதுமக்கள், போலீஸ்காரர்கள், சட்டம், அனைவரும் இணைந்து அழகாக, இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாம். அப்படி தீர்த்து வைத்தால், இது தனி நபர் பிரச்சனையாக முடியும். சிறிதாக, எளிதாக முடியும். ஆனால், இவை அனைத்தும், சமூக ஊடகங்களுக்கு யாராவது தகவல் அளித்தாலோ! அல்லது சமூக ஊடகங்களுக்கு தெரிய வந்தால், இது பெரிய பிரச்சனையாக, சமூக பிரச்சனையாக உருவம் எடுக்கும். சமூக ஊடகங்களுக்கு, தெரியாமல் இருந்தால், போகாமல் இருந்தால், இது தனி நபர் பிரச்சனை. அவர்களுக்கு தெரிந்துவிட்டால், இது சமூக பிரச்சனை 

நிறைவு மற்றும் தீர்வு:- பெற்றோர்கள், பிள்ளைகளை கட்டாயப்படுத்தி, திருமணம் செய்து வைக்கக்கூடாது. பிடித்தவரையே, திருமணம் செய்து வைக்க வேண்டும். பிடித்தவரையே, திருமணம் செய்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டும். அவர்களை, அவர்களின் விருப்பப்படி விட்டுவிட வேண்டும். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. காதலித்தவரையே, திருமணம் செய்து வைக்க வேண்டும். காதலித்தவரையே, திருமணம் செய்து கொள்ள விட வேண்டும். கட்டாயப்படுத்தி, திருமணம் செய்து வைத்தால், அந்த திருமண உறவே நிலைக்காது! நீடிக்காது! திருமணத்திற்கு பிறகு, மோசமான பிரச்சனைகள் கொண்டு வரும். பிளவு அல்லது பிரிவில் முடியும்! காதல் மற்றும் திருமண உறவில், நம்பிக்கை துரோகமே இருக்கக்கூடாது. கணவன் மற்றும் மனைவி, ஒருவரை ஒருவர் ஏமாற்றக்கூடாது. காதலர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றக்கூடாது. உண்மையாக காதலித்து, நேசித்து, திருமணம் செய்து கொள்ள வேண்டும். கணவனும்-மனைவியும், ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ வேண்டும். நன்றாக, ஒற்றுமையுடன் வாழ வேண்டும். திருமணத்திற்கு முன்பு, மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்க செல்லும்பொழுது, ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடிக்கவில்லை என்றால், “இந்த பெண்ணை பிடிக்கவில்லை!”. மற்றும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடிக்கவில்லை என்றால், “இந்த ஆணை பிடிக்கவில்லை!” என்று வெளிப்படையாக, சொல்லி விட வேண்டும். பெற்றோர்களிடம், பிள்ளைகள் பயப்படக்கூடாது. வெளிப்படையாக பேச வேண்டும். மனதில் உள்ளதை, விருப்பத்தை, சொல்லிவிட வேண்டும். அப்பொழுது தான், காதல் மற்றும் திருமண வன்முறைகள் தடுக்கலாம். காதல் மற்றும் திருமண உறவில், நம்பிக்கை துரோகம் இருந்தால், அந்த உறவு நிலைக்காது! நீடிக்காது! பிரிவு மற்றும் வன்முறையை கொண்டு வரும் 

நன்றி - M.Manoj Kumar

வணக்கம் நண்பர்களே!

நமது கட்டுரை தளத்தில் இந்த வருடம் கட்டுரை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கட்டுரையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.

கட்டுரை கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments