தமிழ் காதல் கவிதை அவள்!
நான் நடந்து சென்ற பாதையில்
விரைந்து சென்ற பேருந்தின்
ஜன்னலோரக் கவிதை அவள்...!!!
மறைத்தும் மறைக்காமலும்
அவள் மனதை துப்பட்டாவில் கட்டி தூது அனுப்பினாள்...!!!
நானும் என் எண்ணங்களைத் துடைத்து
மறுநாள் திரும்ப அனுப்பினேன்...!!! காதல் மலர்ந்தது....!!!
தினம் தினம் ஏதோ ஒரு நினைவை சாலையில் சிந்திச் செல்வாள்
நானும் அதை சிறுகச் சிறுக சேமித்து வைத்தேன்...!!!
அருகில் அமரச் சொன்னாள் அணைத்தும் கொண்டாள்
காதோரம் கொஞ்சும் தமிழில் கதைகள் பேசினாள்
கண்களால் சிறைபிடித்தாள் கெஞ்சிக் கேட்டேன்
விடுதலை வேண்டாம் என்று விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது...!!!
கவிஞர் இரா. பா.ஹேமமாலினி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments