பூரண நிலவாய்
உன் முகத்தை
காண முடியாதவாறு
இப்படி திரையிட்டு மறைப்பது ஏன்
நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் நேரத்தில்
எந்தன் கண்கள் உன் கருவிழிகளை ஊடுருவ விழைந்தன.
உந்தன் வரவுக்காக காத்திருந்தன.
கண்மை பூசிய காரிகையே !
விழியோரம் கவிபாடும் அழகுசிலையே!
உங்கள் வதனத்தில் அரும்பும் நகையை காண ஆசைக்கொண்டேன் ...
கவிதைகள் கொஞ்சி பேசும் அழகை
உங்கள் இதழ்களில் கண்டேன் !
என் மொத்த காதலையும் சாறாய் பிழிந்து மையாய் குழைத்து உங்களுக்கு கவிதை எழுதிவிட ஆசைதான் ...
ஆனால் ஏது செய்வேன் ?
நானோ ஒரு வசீரன் ஆயிற்றேன் !
எனக்கு கவிதைக்கு கவிதை
எழுத தெரியாதே !
பூரண நிலவாய் உங்கள் முகத்தை
காண முடியாதவாறு இப்படி கண்ணை கட்டி விட்டு திரையிட்டு
மறைப்பது ஏன் தேவியே ?
நன்றி - வைஷ்ணவி க ரா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments