துயிலை கலைக்க மனமின்றி நான்
குயிலோசையில் அழைக்க - துளியும்
அசைவின்றி ஆழ்ந்த துயிலில்
என் மகன் - ஏனோ தயக்கத்துடன்
என் மனம்- திரும்பியபோது ஓர் அழைப்பு
என்னவன் - என் இயலாமையை உரைக்க,
அவரோ மழைசாரல் தூவி அழைத்து வா என்றுரைக்க, அங்கு
இருதலைக் கொள்ளி எறும்பாய் நின்றது - என் மனம்.
போர்வையை நீக்கி முயற்சிக்க
கோர்வையாய் அழைக்க முடியாமல்
பார்வையால் அங்கு ரசித்தே
நின்றது - தாயுள்ளம்.
தள்ளி போய் நான் அழைக்க
துள்ளி எழுந்து அவன் பார்க்க
துயில் கலக்கத்தில் ஏதுமறியாமல்
தாவி ஓடிய மான்குட்டியைக் கண்டு
தளிர்த்து நின்று மலைத்தே
நின்றது - மானின் மனம்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments