என்னுடைய
அலைபேசி அழைப்புக்காக
காத்துக் கொண்டிருக்கிறன
அவளின் கண்கள் !
(வைர மணி போன்ற)
ஆயிரமாயிரம் நட்சத்திரங்களை
உதிர்ப்பதற்கான தயார் நிலையில்…
மாயமான மருத்துவன்
இன்றுதான் கிடைத்தான்
எங்கோ மண(ன)ம் வீசியது
அவளின் தேகக்காற்று…
வெட்ட வெட்ட
துளித்துக்கொண்டே போகிறது
அவளின் அன்பு…
வேண்டாமென்று ஒதுக்கி வைத்தாளும்
வேண்டுமென்று கட்டியணைத்தாலும்
சேர்ந்தும் சேராமலேயே நிற்கிறது
தாமரை இலையின் மீது தண்ணீர் போல…
கருவாட்டு வாசம்
கருவறையைத் தாண்டி வீசியது
அவள் வைத்த வாடிய
மல்லிகைப் பூ…
களங்க வேண்டாம்
கண்ணே !
நான் இருக்கிறேன்
எப்போதும் உன்னோடு
மேகக் கூட்டத்திற்கு நடுவே நின்ற
நிலவிடம் வானம் சொன்னது…
கதைகதையாய் சொன்னாலும்
கதைக்காமல் சொன்னாலும்
அவளது நினைவுகள்
என்னோடு தான்
ஊசலாடிக் கொண்டிருக்கினறன…
அவளுக்கும் எனக்குமான
பிணக்குகளை ஒரேயடியாக
தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று
தான் நினைக்கின்றேன்
ஆனாலும் ஏனோ அது
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
கவிதை வரிகளாக…
கல்லடித்து இறந்தவர்கள் உண்டு
ஆனால் கண்ணடித்து
இறந்தவர்கள் உண்டா?
ஆம்! அவள் ஓரவிழிப் பார்வையில்
நான் செத்தேப் போய்விட்டேன்…
நன்றி - முனைவர் அ. ஞானவேல்.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments