யாரோ ஒருவனாய்
என்னை பார்த்தாளோ?
கொஞ்சம் வித்தியாசமாய்
உணர்ந்தாளோ?
எதுவாய் எண்ணியிருப்பாள்?
உயிராகவோ? சவமாகவோ?
நகையாடும் பொம்மையாகவோ?
இல்லையெனில் நாயாகவோ???
எதுவாக இருந்தாலும் அவளிடத்தில்
அதுவாகவே இருக்க போகிறேன்.
அலாதியான அன்புடன்
சிந்தை முழுதும் அவளுக்காக
என் நட்பும் அன்பும்
காத்துக்கிடக்கும்...
நன்றி - இரா.விக்னேஷ்வரன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments