நிறைநீர் கடம்பே நிறைநீர் கடம்பே
நிறைமதி வடிவோடு நறுங்கடம்பே
துறைசேர் கடம்பே துறைசேர் கடம்பே
துறைபடி நீரோடு துறுங்கடம்பே
வையை கரையில் வண்ண கடம்பில்
வண்டு கதைப்பது பண்ணா கடக்குது
கடம்போடு வாழ்வென ஊரொன்று இருக்க
கடம்பனென வேலனுக்கு பேரொன்னு இருக்கு
உருளிணர் கடம்பே உருளுது மனமே
கவின்மிகு கடம்பே கவியேற்றும் கடம்பே
திணிநிலை கடம்பே திரளரை அழகே
திகழ்நிறை கடம்பே திறம்பா மணமே
கடம்பமர் செல்வன் கடம்பிலை மலரோடு
கமழச்சூடி சிறப்பது கடம்பனின் அணிநிலை
சோலை மலையேற செல்லும் வழியில்
செம்மை கடம்பென சொல்லும் இருபுறம்
நீர்நிறை வையை நீர்க்கடம்பு நிறைய
நீரவர் நினைய நீங்கா மதுரை
நிறைநீர் கடம்பே நிறைநீர் கடம்பே
நிறைமதி வடிவோடு நறுங்கடம்பே
துறைசேர் கடம்பே துறைசேர் கடம்பே
துறைபடி நீரோடு துறுங்கடம்பே
நன்றி - அழ.குழ.மா.அழகப்பன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments