பெண்களைப் போற்றுவோம்
பெண்களைப் போற்றுவோம்
ஆம் பெண் என்பவள் . . . .
அன்பின் உருவம் பெண்
பாசத்தின் மறுபெயர் பெண்
ஈர் ஐந்து மாதம் கருவில் சுமந்து
தன் இரத்தத்தை பாலாக்கி
உயிர் கொடுப்பவள் பெண்
தன் பாதம் காயமுற ஈன்ற சேய்க்கு
பூப்பாதம் அமைப்பவள் பெண்
தன் விழிகளை விழிக்கச் செய்து
பிஞ்சு விழிகளை உறங்கச் செய்பவள் பெண்
சோகத்தை தான் சுமந்து
செர்க்கத்தை காட்டுபவள் பெண்
தீயோரைக் கண்டால் ஆழியாகி பொங்குபவளும் பெண்
சான்றோரைக் கண்டால் சாந்தமாகி பதுமையாகுபவளும் பெண்
அத்தகு பெண்களே நாட்டின் கண்கள். . .
கண்கள் இல்லையேல் உருவம் உயிர் பெறாது
பெண்கள் இல்லையேல் உலகம் வாழ்வு பெறாது
பேதையால், கன்னியாய், மங்கையாய். தாரமாய், தாதியாய். . .
இத்தனை அவதாரம் எடுப்பதால் பெண்ணும் ஒரு தெய்வம்
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டும் என்று
பெண்மையைப் போற்றிப் பாடியதாலோ அவனுக்கு “பாரதி”
மக்கள் தாகம் தீர்ப்பதாலோ நதிகளுக்கு “கங்கா யமுனா சரஸ்வதி”
சாதனைகளோடு சரித்திரம் படைக்கும் அனைவரும்
பாரதி கனவு கண்ட “புதுமைப்பெண்”
பெண்களைப் போற்றுவோம்! பெண்களைப் போற்றுவோம்!!
நன்றி -
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments