கசக்கிய கந்தலிலும் கசக்காத
துணியை அழகு எனக்கருதி அதை
ஆடையெனக் கொள்வர்
வாய்மையின் வலியுணரார்.
வாய்மைதான் பொய்மையெனும்
இருளுடைக்கும் தீயென்பதை
இவர்களால் உணரத்தான் முடியுமா?
இல்லை உணர்த்தத்தான்
முடியுமா வாய்மையின் கோட்டை.
வாய்மையே வெல்லுமாம் நீதியில்.
இங்கு உண்மையும் வாய்மையே
அதை எடுத்துரைப்பதும் வாய்மையே.
பொய்மையை வாய்மையாக
கூறும் போது வாய்மை பொய்க்கிறது
அரச நீதியில். ஆனால் அவர்களுக்கு தெரியாது
கடவுள் நீதி இருப்பது என்பது.
நன்றி - Nitha
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments