பித்தலாட்டம் சிறுகதை போட்டி. Short Story Competition Bitterness - 2023 - Sltamil

பித்தலாட்டம் சிறுகதை போட்டி

ஒரே ஒரு கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கி கொண்டிருந்தது. அந்த கிராமத்தில், ஒரு பெரிய கட்சியை சேர்ந்த “பார்த்திபன்” மற்றும் அவரது சகாக்கள், வீடு வீடாக, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தேர்தலில் நின்றனர்.   பார்த்திபன் ஊர் தலைவர் பதவிக்கு நின்றார். அவரது சகாக்கள் கவுன்சிலர் பதவிகளுக்கு நின்றனர். ஒரு பக்கம், பண பட்டுவாடாவும் நடக்கிறது. பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், “ஒவ்வொரு வீட்டுக்கும், ஆயிரம் ருபாய் கொடுத்து விடுவோம்!” என்று பேசிக்கொண்டு, ஆயிரம் ருபாய் ஒவ்வொரு வீடாக, பண பட்டுவாடா செய்கின்றனர்

அந்த கிராமத்தில், மக்களோடு மக்களாக “பாபு” எனும் இளைஞன். அவனது மனைவி, உமாவோடு வாழ்கிறான். உள்ளாட்சி தேர்தலும் நடக்கிறது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றது. பார்த்திபன், வெற்றி பெற்று ஊர் தலைவர் ஆகிறார். அவரது சகாக்கள் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் ஆகின்றனர்.

ஒரு நாள் ஊர் மக்களோடு சேர்ந்து பாபு மற்றும் அவனது மனைவி உமா, ஊர் தலைவர் பார்த்திபனிடம், ஊரின் பிரச்சனைகள் அடங்கிய புகார் மனு அளிக்கின்றனர். அப்பொழுது திடீரென்று, ஊர் தலைவர் பார்த்திபன் புகார் மனுவை கிழித்து விட்டு குப்பை கூடையில் வீசுகிறார். பிறகு பாபுவிடம், “தம்பி! மக்கள் பிரச்சனையை தீர்த்து வெச்சிட்டா! நாங்க எப்படி எலெக்ஷன்-ல செலவழிச்ச பணத்தை திரும்ப வாங்குறது? மீட்கிறது? இந்த மக்கள், அந்த பணத்தை திருப்பி கொடுப்பாங்களா?” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பாபு “ஐயா! மக்கள் ரொம்ப பாவம்! உங்களை நம்பி ஒட்டு போட்டு ஜெயிக்க வெச்சிருக்காங்க! நீங்க ஊருக்கு நல்லது பண்ணா, அடுத்த தடவை இதை விட பெரிய பதவி-ல உங்களை உட்கார வைப்பாங்க!” என்று பதில் கூறுகிறான். 

அதன் பிறகு ஊர் தலைவர் பார்த்திபன், “தம்பி! உனக்கும், உன் பொண்டாட்டிக்கும், எவ்வளவு பணம் வேணாலும் கொட்டி தரேன்! வாங்கிட்டு, ராஜா மாதிரி செட்டில் ஆகிடு! சந்தோஷமா இரு! எதுக்கு, இந்த வீணா போன ஜனங்களோட சேர்ந்து, உன் நேரத்தையும், உடம்பையும் கெடுத்துகிற? இந்த ஜனங்களை விட்டு தள்ளு!” அதன் பிறகு, பாபு “ஐயா! முடியாதுங்க! மக்கள் பிரச்னையை, தீர்க்காம இந்த இடத்தை விட்டு போகமாட்டேன்” என கூறுகிறான். அதன் பிறகு, கோபம் அடையும் ஊர் தலைவர் பார்த்திபன் “ஏன்டா! ஒரு தடவை சொன்னா அறிவு இல்லை! கேட்கமாட்டியா?”  என பாபுவை திட்டி, மேஜையில் உள்ள சொம்பில் இருக்கும் தண்ணீரை, பாபுவின் மேல் ஊற்றுகிறார். 

பிறகு பொறுமை இழந்து, கோபம் அடையும் பாபு “டேய்!”  என ஆவேசமாக கூச்சலிடுகிறான். பார்த்திபனின் சட்டையை பிடிக்கிறான். பார்த்திபனை அடிக்க முயல்கிறான். ஊர் தலைவர் பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், பாபுவை மோசமாக போட்டு அடிக்கின்றனர். போலீசை வரவழைத்து, போலீஸ்காரர்களிடம் பாபுவை ஒப்படைக்கின்றனர். போலீஸ்காரர்கள், பாபுவை கைது செய்து அழைத்து செல்கின்றனர் பாபுவின் மனைவி உமா மற்றும் மக்கள் கூட்டம், இதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். போலீஸ்காரர்கள், அவர்கள் மீது தடியடி நடத்துகின்றனர். அந்த இடமே போர்க்களமாக மாறுகிறது.

அந்த கிராமத்தை சேர்ந்த “விவேக்”  எனும் இளைஞர் மற்றும் அவனது நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், “பேஸ்புக்”, “ட்விட்டர்”, “ஷேர்சாட்”,  “இன்ஸ்டாகிராம்” என சமூக ஊடக செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளை பரப்பி விடுகின்றனர். ஊர் தலைவர் பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், பண பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற்ற வீடியோ காட்சிகள். பாபுவை, அவர்கள் அடித்த வீடியோ காட்சிகள். போலீஸ்காரர்கள், மக்கள் மீது தடியடி நடத்திய வீடியோ காட்சிகள். என அனைத்து வீடியோ காட்சிகளும் ஊரெல்லாம், நாடெல்லாம், வைரலாக பரவுகிறது. இது மாநில முதலமைச்சர் வரை செல்கிறது. 

அடுத்த நாள், பாபுவின் மனைவி உமா, ஊர் பொதுமக்கள் மற்றும் தன் வழக்கறிஞரோடு, பாபுவை ஜாமீனில் விடுவிக்க, காவல் நிலையத்துக்கு செல்கின்றனர். போலீஸ்காரர்கள், பாபுவை ஜாமீனில் விடுதலை செய்ய மறுக்கின்றனர். 

போலீஸ் ஆணையர், சட்ட அமைச்சர், முதலமைச்சர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என பலரிடமிருந்து, வரிசையாக காவல் நிலையத்திற்கு அழைப்புகள் வருகின்றன. பிறகு, பாபு விடுதலை செய்யப்படுகிறார்                    அதன் பின்னர், முதலமைச்சர், சட்ட அமைச்சர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உத்தரவின்படி, பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களின்  பதவி பறிபோகிறது 

அந்த கிராமத்தில், 1 வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தல், புதிதாக நடக்கிறது. அந்த தேர்தலில் நின்று, பாபு வெற்றி பெற்று, புதிய ஊர் தலைவர் ஆகிறார். அவரது மனைவி உமா, புதிய ஊர் துணை தலைவர் ஆகிறார். இளைஞர் விவேக் மற்றும் அவரது நண்பர்கள், புதிய கவுன்சிலர்களாக ஆகிறார்கள். இறுதியில், அந்த கிராமம் அபார வளர்ச்சி அடைகிறது. மற்றும் அந்த கிராம மக்கள், மகிழ்ச்சியோடு வாழ தொடங்கினர்.

நன்றி - M.Manoj Kumar

வணக்கம் நண்பர்களே!

நமது சிறுகதை தளத்தில் இந்த வருடம் சிறுதைப் போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் சிறுகதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் சிறுகதைகளை அனுப்பி வைக்கலாம்.

சிறுகதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments